இந்தியா

ப்ரீத்தி ஜிந்தா பாலியல் புகார்: 2 பேரின் வாக்குமூலம் பதிவு

செய்திப்பிரிவு

தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா (44) மீதான நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் (39) பாலியல் புகார் தொடர்பாக 2 பேரின் வாக்குமூலத்தை மும்பை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

"ப்ரீத்தி ஜிந்தாவின் பாலியல் புகார் தொடர்பாக, சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் கடந்த மே 30-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் கார்வாரே பவிலியனில் இருந்த 2 பேரிடம் சனிக்கிழமை இரவு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது" என ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

இதுதொடர்பாக ப்ரீத்தியிடமும் விசாரிக்க புலனாய்வு அதிகாரிகள் முயற்சித்தனர். ஆனால், அவர் இப்போது வெளிநாட்டில் இருப்ப தால் விசாரிக்க முடியவில்லை என ஒரு அதிகாரி தெரிவித்தார்.

நெஸ் வாடியாவுடனான இ-மெயில் பரிமாற்றங்களை சமர்ப் பிக்குமாறு புலனாய்வு அதிகாரிகள் ப்ரீத்தியை கேட்டுக் கொள்வார்கள் எனத் தெரிகிறது. இதன்மூலம் இருவருக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை புரிந்துகொள்ள முடியும் என அவர்கள் கருது கின்றனர்.

தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது ப்ரீத்தி ஜிந்தா மும்பை போலீஸில் வியாழக்கிழமை இரவு புகார் அளித்தார். அதில், மே மாதம் 30-ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே ஐபிஎல் போட்டி நடந்தபோது, பவிலியனில் வைத்து தன்னிடம் நெஸ் வாடியா பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம்சாட்டி இருந்தார்.

தொழிலதிபர் நெஸ் வாடியா, ப்ரீத்தி ஜிந்தா இருவருமே கிங்ஸ் லேவன் பஞ்சாப் அணியின் உரிமை யாளர்கள் ஆவர். 5 ஆண்டுகளாக காதலர்களாக இருந்த இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர்.

இந்த சம்பவம் நடந்தபோது, பவிலியனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரர்கள், வான்கடே மைதான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ப்ரீத்தி புகாரின் அடிப்படையில் மும்பை மரைன் டிரைவ் போலீ ஸார், நெஸ் வாடியா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 354 (மானபங்கப்படுத்துதல்), 504 (அமைதியை குலைக்கும் விதத்தில் உள்நோக்கத்துடன் அவமதித்தல்), 506 (குற்ற மிரட்டல்), 509 (சைகை அல்லது வார்த்தைகள் மூலம் பெண்களை அவமதித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, சம்பவ தினத் தன்று ப்ரீத்தி பவிலியனில் முன் வரிசையிலும் நெஸ் வாடியா 6 வரிசைகள் தள்ளி பின் வரிசையிலும் அமர்ந் திருந்தது வீடியோ காட்சியில் பதிவாகி உள்ளதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT