எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை, நாங்கள் வீட்டிற்கு செல்ல மாட்டோம் என பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகைத் அறிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து விவசாயிகள் டெல்லியின் புறகநகர் பகுதிகளில் உள்ள சாலையில் அமர்ந்து போாரட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளுடன் 11 சுற்றுப் பேச்சுகளை மத்திய அரசு நடத்தியும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.
இந்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டத்தை நடைமுறைப்படுத்த தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. இந்தநிலையில் 3 விவசாய சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார்.
இந்தநிலையில் லக்னோவில் இன்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகைத் கூறியதாவது:
எம்எஸ்பி உத்தரவாத சட்டம், விதை மசோதா, பால் கொள்கை போன்ற பல பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாததால் போராட்டம் நிறுத்தப்படாது. அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இல்லையெனில் நாங்கள் வீட்டிற்கு செல்ல மாட்டோம்: