பிரதிநிதித்துவப் படம். 
இந்தியா

வெளிநாட்டு மதுபானங்கள்; இறக்குமதி வரி 50 சதவீதம் குறைப்பு: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

ஏஎன்ஐ

வெளிநாட்டு மதுபானங்களுக்கு இறக்குமதியை வரியை 50 சதவீதம் குறைத்துள்ளதாக மகாராஷ்டிரா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

''வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு இறக்குமதி வரி 50 சதவீதம் குறைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் வெளிநாட்டு மதுபானங்கள் உற்பத்திக்கான செலவில் 300 சதவீதத்தில் இருந்து 150 சதவீதமாக கலால் வரி குறைக்கப்படுகிறது.

கலால் வரியை குறைப்பதால், கடத்தல் மற்றும் சட்டவிரோத, கள்ளசாராய மதுபானங்களின் விநியோகத்தை தடுக்க உதவும்.

இறக்குமதி செய்யப்படும் மதுபான விற்பனை மூலம், மாநில அரசுக்கு ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. இதனை அடுத்து அரசின் வருவாய் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT