பைகுல்லா ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிய உள்ளூர் ரயிலில் ஏற முயன்றபோது பயணி சமநிலையை இழந்து விழும் நேரத்தில் அவரைக் காப்பாற்ற பெண் கான்ஸ்டபிள் ஓடும் காட்சி | படம்: ட்விட்டர். 
இந்தியா

ஓடும் ரயிலிலிருந்து விழுந்த பயணியின் உயிரைக் காப்பாற்றிய பெண் கான்ஸ்டபிள்; வைரலான வீடியோ

செய்திப்பிரிவு

ஓடும் ரயிலில் ஏறமுயன்றபோது, தவறி விழுந்த பயணியின் உயிரைக் காப்பாற்றிய பெண் கான்ஸ்டபிளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மும்பை புறநகர் ரயில்வே நிலையமான பைகுல்லா ஸ்டேஷனில் வீடியோவில் பதிவாகி இக்காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது.

இச்சம்பவம் குறித்து குறித்து மத்திய ரயில்வே ட்விட்டரில் வீடியோவை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளதாவது:

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி ஒருவரை பெண் கான்ஸ்டபிள் வேகமாக ஓடிச்சென்று காப்பாற்றினார்.

இந்த சம்பவத்தின் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்த மத்திய ரயில்வே கூறியுள்ளதாவது:

பைகுல்லா ரயில் நிலையம் பிளாட்பாரம் நம்பர் ஒன்றிலிருந்து புறப்பட்ட ரயிலில் 40 வயது பெண் ஒருவர் ஏற முயன்றார். அப்போது ரயிலில் ஏறும் நபர்களை உன்னிப்பாகக் கண்காணித்துக் கொண்டிருந்த பணியில் இருக்கும் பெண் கான்ஸ்டபிள் சப்னா கோல்கர் அந்தப் பயணி, ஓடும் ரயிலில் ஏற முயல்வதையும், சமநிலை இழந்து ஓடும் ரயிலிலிருந்து கீழே விழுவதையும் கவனித்துவிட்டு உடனடியாக வேகமாக ஓடிச்சென்று காப்பாற்றினார்.

அந்த பெண் கான்ஸ்டபிள், பயணி கீழே விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கிய நேரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப விரைவாக எதிர்வினையாற்றுவதையும் வீடியோவில் காணலாம்.''

இவ்வாறு தெரிவித்துள்ளது.

மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தள பயனர்களால் பகிரப்பட்டன. ''பெண் காவலரின் உயர்ந்த செயல்பாடு'' என்றும், ''மிகச் சிறந்த சமயோசித உணர்வு'' என்பன உள்ளிட்ட பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

SCROLL FOR NEXT