இந்தியா

ரியல் எஸ்டேட் மசோதா நிறைவேறியது

ஏஎன்ஐ

மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையிலும் ரியல் எஸ்டேட் மசோதா நேற்று நிறைவேறியது.

கடந்த 2013-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின்போது ரியல் எஸ்டேட் மசோதா நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு மசோதாவில் பல்வேறு திருத்தங்களை செய்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகளின் ஆலோசனையின் பேரில் மசோதாவில் 20 முக்கிய திருத் தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பேரில் கடந்த 10-ம் தேதி காங்கிரஸ் ஆதரவுடன் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இம்மசோதா நேற்று மக்களவை யில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அவையில் ஆளும் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT