2021 ஆம் ஆண்டுக்கான தூய்மையான நகரங்களின் பட்டியலில் 5வது முறையாக இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. மாநில வாரியான பட்டியலில் சத்தீஸ்கர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
மத்திய அரசின் ஸ்வச் சுர்வேக்சான் திட்டத்தின் கீழ் நாட்டின் தூய்மையான நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5வது முறையாக இந்தூர் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகர் இரண்டாம் இடத்தினைப் பிடித்ததுள்ளது.
வெற்றி பெற்ற நகரங்களுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கலந்து கொண்டார்.
நாடு முழுவது ம் 4320 நகரங்களில் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது. இதில் 4.2 கோடி மக்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளைத் தெரிவித்தனர்.
நாட்டிலேயே சுத்தமான மாநிலமாக சத்தீஸ்கர் தேர்வாகியுள்ள நிலையில், 100க்கும் மேற்பட்ட உள்ளாட்சிகளைக் கொண்ட மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளன.
தூய்மையான நகரங்களின் பட்டியலில் டாப் 10:
இந்தூர்
சூரத்
விஜயவாடா
நவிமும்பை
புதுடெல்லி
அம்பிகாபூர்
திருப்பதி’புனே
நொய்டா
உஜ்ஜெய்ன்
லக்னோ