விவசாயிகளின் போராட்டம் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யாமல் முடிந்துவிடாது. அவர்களின் கோரி்க்கையை நிறைவேற்றுங்கள் என்று பாஜக எம்.பி. வருண் காந்தி , பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரப்பிரதேசம் பிலிபித் தொகுதிையச் சேர்ந்த பாஜக எம்.பி. வருண் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:
3 வேளாண் சட்டங்களை நீங்கள் திரும்பப் பெறுவதாக நேற்று அறிவித்தமைக்கு மிகுந்த நன்றி. இந்த முடிவை முன்பே எடுத்திருந்தால், அப்பாவி விவசாயிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும்.
லக்கிம்பூர்கெரி கலவரம் ஜனநாயகத்தின் மீதான களங்கம். இதற்கு காரணமானவர்கள் மீதும், இதில் தொடர்புடைய மத்திய அமைச்சர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையைக் கோருகிறார்கள். இந்த குறைந்த ஆதரவு விலையை உறுதி செய்யாமல் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை நிறைவு செய்யமாட்டார்கள். விவசாயிகள் மத்தியில் பரவலாக கோபம் உருவாகியுள்ளது, இது வேறு விதத்தில் திரும்பும்.
ஆதலால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டரீதியான உரிமையை வழங்குவது முக்கியம். இவ்வாறு வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு பொருளதாார ரீதியான பாதுகாப்பும் கிைடக்கும்.
நம்முடைய தேசத்தின் நலன் கருதி உடனடியாக விவசாயிகளின் இந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும்.
மேலும், இந்தக் கலவரத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தாருக்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்கிட வேண்டும், அரசியல் நோக்கத்தோடு விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்
இவ்வாறு வருண் காந்தி தெரிவித்துள்ளார்