கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையை பூர்வீகமாக கொண்டவர் நாகராஜ் கல்குதாகர் (39). பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிய இவர், 2 ஆண்டுக்கு முன் ராஜினாமா செய்தார். அதன்பின் விவசாயி களுக்கு ஆதரவான போராட்டங்களிலும் பங்கேற்றார்.
மேலும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி ‘டெல்லி சலோ' என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டார். நாகராஜ் 185 நாட்கள் நடந்து நேற்றுடன் 5,070 கிலோ மீட்டர் தூரத்தை நிறைவு செய்தார். வேளாண் சட்டங்களை அரசு வாபஸ் பெற்ற தகவல் கிடைத்த போது உ.பி.யின் மதுராவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நாகராஜ் கல்குதகர் தொலைபேசியில் இந்து தமிழ் நாளிதழிடம் கூறுகையில்,''இது விவசாயிகளின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி'' என்றார்.