மோசமான காவல்துறையில் பிஹார், உத்தரபிரதேச மாநிலங்கள் முன்னிலை வகிப்பதாகவும், தென் மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் காவல் துறை யினரின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பதை இந்தியன் போலீஸ் பவுண்டேஷன் (ஐபிஎஃப்) அமைப்பு ஆய்வு செய்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் காவல் துறை குறித்து ஒரு ஆய்வை அந்த அமைப்பு நடத்தியுள்ளது. பொதுமக்களின் பிரச்சினைகளை அணுகுவது, குற்றங் களை கையாளும் முறை உட்பட பல அம்சங்கள் ஆய்வில் இடம் பெறுகின்றன.
அந்த வகையில் பிஹார், உத்தர பிரதேச மாநில காவல்துறை யின் செயல்பாடுகள் மோசமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த காவல்துறையின் செயல்பாடு 69 சதவீதம் திருப்தி கரமாக உள்ளதாக அந்த ஆய்வுகள் முடிவுகள் தெரிவிக்கின்றன.
மோசமான காவல்துறை செயல் பாடுகள் உள்ள மாநிலங்களாக பிஹார், உத்தரபிரதேசம், சத்தீஸ் கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகியமாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்கள் மோசமான காவல்துறை பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளன.
அதே நேரத்தில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தென்இந்தியாவைச் சேர்ந்த 3 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் முதலிடத்தில் ஆந்திராவும், 2-ம் இடத்தில் தெலங்கானாவும், 3-ம் இடத்தில் அசாமும், 4-ம் இடத்தில் கேரளாவும், 5-ம் இடத்தில் ஒடிஷாவும் உள்ளன.
இதுகுறித்து இந்தியன் போலீஸ் பவுண்டேஷன் அமைப்பின் சேர்மனும், முன்னாள் உ.பி. போலீஸ் டிஜிபியுமான பிரகாஷ் சிங் கூறும்போது, "பிரதமரின் நவீன போலீஸ் முன்னெடுப்பு திட்டத்தின் அடிப்படையில் பல்வேறு மாநில போலீஸாரின் செயல்பாட்டை ஆய்வு செய்தோம். நாட்டில் ஒட்டுமொத்த போலீஸாரின் செயல்பாடு 69 சதவீதம் திருப்தி அளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் கடைசியில்உள்ள மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதற்கான முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். அதற்குத் தேவையான பயிற்சிகள் அந்த மாநில போலீஸாருக்கு வழங்கப்படும்" என்றார்.
ஐபிஎஃப் தலைவரும், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான என்.ராமச்சந்திரன் கூறும்போது, "நாடு முழுவதும் 1.61 லட்சம் பேரிடம் இந்த ஆய்வை நடத்தினோம். ஆன்-லைன் மூலமாகவும், நேரடியாகச் சென்றும் கடந்த 5 மாதங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன" என்றார். -பிடிஐ
நாட்டில் ஒட்டுமொத்த போலீஸாரின் செயல்பாடு 69 சதவீதம் திருப்தி அளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்