இந்தியா

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நாட்டை சீரழிக்கும் அறைகூவலை அனுமதிக்க முடியாது: பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

பிடிஐ

'‘கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நாட்டை சீரழிக்க அறைகூவல் விடுப்பதை அனுமதிக்க முடியாது’’ என்று பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடந்தது. முதல்நாள் சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உரையாற்றுகையில், ‘‘பாஜக.வை விமர்சித்தால் கூட நாங்கள் பொறுத்துக் கொள்வோம். நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் வகையில் விமர்சிப்பதை ஏற்க மாட்டோம்’’ என்று எச்சரிக்கை விடுத்தார்.

நிறைவு நாளான நேற்று கூட்டத்தில் பல்வேறு அரசியல் தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத் துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:

கருத்து சுதந்திரமும் தேசிய வாதமும் இரண்டும் இணைந்து இருக்க வேண்டியது அவசியம். கருத்து வேறுபாடுகளையும் எதிர்ப்புகளையும் தெரிவிக்க அரசியல் சட்டம் முழு சுதந்திரம் வழங்கி உள்ளது. ஆனால், நாட்டை சீரழிக்கும் நோக்கில் அறைகூவல் விடுப் பதற்கு எந்த அனுமதியும் வழங்க வில்லை. நம் நாட்டின் நம்பிக்கைகளையும், தத்துவங்களையும் தேசியவாத கொள்கைதான் வழிநடத்திக் கொண்டிருக்கிறது.

பாரத மாதாவுக்கு ஜே என்று சொல்வதற்கு மக்களுக்கு பிரச்சினையில்லை. கொல்கத்தாவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பின்னர் பார்வையாளர்களின் முழக்கமே அதற்கு சாட்சி.

காங்கிரஸ் கட்சி தனது தரம் தாழ்ந்து செயல்பட்டு கொண்டிருக் கிறது. இதை பிஹார், மேற்கு வங்கம், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி மூலம் புரிந்து கொள்ளலாம். கூட்டணியில் கடைசி ஆளாக சேர்ந்து கொள்ள கூட காங்கிரஸ் தயாராகி விட்டது. உத்தராகண்ட் மாநிலத்தில் பிரி வினையை தூண்டி விட காங்கிரஸ் கட்சி சதி செய்கிறது. ஜம்மு காஷ்மீரில் சிறந்த நிர்வாகத்தை வழங்குவதில் பாஜக உறுதியாக உள்ளது. ஆனால், மேலும் மேலும் நிபந்தனைகளை மக்கள் ஜனநாயக கட்சி விதிக்கக் கூடாது.

எந்த திக்கும் தெரியாத திசை யில் இந்தியாவை நிர்வகித்த (காங் கிரஸ் ஆட்சியில்) காலம் இருந்தது. இப்போது நிலைமை அப்படி இல்லை. உறுதியான தலைமையின் கீழ் இலக்கை நிர்ணயித்து, சமூக நல்லிணக்கம், வளர்ச்சி ஆகிய திட்டங்களுடன் நாடு பயணித்து கொண்டிருக்கிறது. அசாம் தேர்த லில் பாஜக அமோக வெற்றி பெறும். மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக பெரிய கூட்டணி அமைத்துள்ளது. கேரளாவில் பாஜக.வின் செல் வாக்கு அதிகரித்துள்ளது.

மேலும், பதான்கோட்டில் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்திய போது, வீரர்கள் விரைந்து செயல்பட்டதற்கு பாராட்டு தெரிவித்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு ஜேட்லி கூறினார்.

SCROLL FOR NEXT