அசாம் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்ட் டரின்போது போலீஸ் எஸ்.பி.யை தனியாக விட்டுச் சென்ற 4 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ரோங்தாங் வனப் பகுதியில் ஹம்ரன் பகுதி எஸ்.பி. நித்தியானந்தா கோஸ்வாமி தலை மையிலான போலீஸார் தீவிரவாதிகளை தேடும் பணியில் வியாழக் கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளுக்கும் போலீ ஸாருக்கும் இடையே சண்டை நடைபெற்றது.
இந்த என்கவுன்ட் டரின்போது போலீஸ் எஸ்.பி. நித்தியானந்தா கோஸ்வாமியையும் அவரது உதவியாளர் ரதுல் நுனிசாவையும் தனியாக விட்டு விட்டு மற்ற 4 போலீ ஸார் தப்பியோடி விட்ட தாகக் கூறப்படுகிறது.
என்கவுன்ட்டரின் போது போலீஸார் தப்பி ஓடிய சம்பவம் தொடர் பாக சம்பந்தப்பட்ட 4 போலீஸாரையும் அசாம் முதல்வர் தருண் கோகாய் உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்