பஞ்சாபில் ஒரு ஐபோனுக்காக நடந்த சண்டையில் 21 வயது இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபில் லூதியானா மாவட்டத்தைச்சேர்ந்த ஜாக்ரான் அருகே ஹன்ஸ் கலான் கிராமத்தில் ஒரு பிறந்தநாள் விழாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஹர்ப்ரீத் சிங் என்பவரின் அழைப்பின்பேரில் அவரது பிறந்தநாளுக்க ரன்தீப் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். பிறந்தநாள் விருந்தில் மதுவும் பரிமாறப்பட்டது.
அப்போது மன்தீப் என்பவர் ரன்தீப்பிடம் அவரது செல்போனை தரும்படி கேட்டுள்ளார். ஹர்பிரீத் சிங் சங்னாவிடம் தனது போனை கொடுத்ததாக மன்தீப்புடன் ரன்தீப்புககு ஐ-ஃபோன் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஹன்ஸ் கலான் கிராமத்தைச் சேர்ந்த ஹர்ப்ரீத்துக்கு தனது போனை தருவதாக உறுதியளித்ததை ரன்தீப் அவருக்கு நினைவுபடுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த மன்தீப் சிங் அவர் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். சம்பவத்தை அறிந்ததும் ரன்தீப் சிங்கின் சகோதரர்களும் அங்கு விரைந்து வந்துள்ளனர். கண்ணெதிரே அவர்களது சகோதரரை மன்தீப் சிங்கும் ஹர்ப்ரீத் சிங்கும் தாக்கியதாகவும் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, தனது சகோதரரை காப்பாற்ற வந்த இருவரையும்கூட மன்திப் சிங்கும் ஹர்ப்ரீத் சிங்கும் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். அதன்பின் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
பின்னர் இரு சகோதரர்களும் படுகாயமடைந்த நிலையில் தாக்குதலில் மயங்கி விழுந்திருந்த தங்கள் சகோதரரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மருத்துவர் ரன்தீப் சிங் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரன்தீப் சிங் சகோதரர்கள் அளித்த புகாரின்பேரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரன்தீப்பை தாக்கிக்கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட ஜாக்ரோனின் தஷ்மேஷ் நகரைச் சேர்ந்த மன்தீப் சிங், மற்றும் சங்னா கிராமத்தைச் சேர்ந்த ஹர்பிரீத் சிங் ஆகியோரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ஒரு ஐபோனுக்காக நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.