அந்தமான் அருகே வங்கக்கடலில் ஏற்கெனவே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நிலவி வரும் சூழலில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாககூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வரும் 17 மற்றும் 18-ம் தேதிகளில் வட தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
தெற்கு மகாராஷ்டிராவில் கிழக்கு-மத்திய அரபிக்கடலில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். அந்தமான் கடலின் மத்திய பகுதிகளுக்கு மேல் நேற்றைய காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 0530 மணி அளவில் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உள்ளது.
இன்று காலை நிலவரப்படி இது நகர வாய்ப்புள்ளது. மேற்கு-வடமேற்கு மற்றும் கிழக்கு-மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு விரிகுடாவில் நிலைப்பெறும்.
அடுத்த 48 மணி நேரத்தில் வங்ககடலில் மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரப் பிரதேசம் - வட தமிழ்நாட்டிற்கு அப்பால் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடைய வாய்ப்புள்ளது.
நவம்பர் -ம் தேதி அன்று இது மேலும் தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனினும் இது அதி தீவிரமாக வலுவடை குறைவான வாய்ப்பே உள்ளது.
இதற்கு முக்கியமாக மற்றொரு குறைந்த அழுத்தப் பகுதி உருவாவதற்கான வாய்ப்பு காரணமாகும். வடக்கு அந்தமான் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நிலவும் சூழலில் அரபிக்கடலில் மற்றொன்று உருவாக வாய்ப்புள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு மகாராஷ்டிரா கடற்கரையில் கிழக்கு- மத்திய அரபிக்கடலில் கிழக்கு- மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரேபிய கடலில் உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 48மணிநேரத்தில் வலுப்பெறும்.
மழை எச்சரிக்கை
நவம்பர் 15-ம் தேதி: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில், குறிப்பிட்ட இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
கடலோர கர்நாடகா மற்றும் அதை ஒட்டிய வடக்கு கேரளா மற்றும் தெற்கில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும், குறிப்பிட்ட இடங்களில் அதிக மழை பெய்யும்.
நவம்பர் 16-ம் தேதி: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், கடலோர கர்நாடகா மற்றும் தெற்கு கொங்கன் மற்றும் கோவா பகுதியில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் அதிக மழையும் பெய்யும் வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 17-ம் தேதி: தென் கடலோர ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழகத்தின் வட கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். ஒரு சில இடங்களில் அதிக மழை பெய்யலாம்.
நவம்பர் 18-ம் தேதி: தென் கடலோர ஆந்திர பிரதேசம் மற்றும் வட கடலோர தமிழ் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புண்டு.
காற்று குறித்த எச்சரிக்கை:
நவம்பர் 15 அன்று அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் இருக்கும்.
நவம்பர் 16 ஆம் தேதியின் போது தென்கிழக்கு வங்காள விரிகுடாவை ஒட்டியுள்ள பகுதியில் 60 கிமீ வேகம் வரை காற்று வீசக்கூடும்.
நவம்பர் 17-ம் தேதி மேற்கு-மத்திய மற்றும் மேல் தென்மேற்கு வங்காள விரிகுடாவை ஒட்டிய மற்றும் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் இருக்கும்.
நவம்பர் 18-ம் தேதி கிழக்கு-மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் கர்நாடகா மற்றும் வட கேரளா கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசும்.
நவம்பர் 16-ம் தேதி கிழக்கு-மத்திய அரபிக்கடல் வழியாக கோவா - தெற்கு மகாராஷ்டிரா கடற்கரை பகுதியிலும், 17 ஆம் தேதி மற்றும் 18 ஆம் தேதி மகாராஷ்டிரா கடற்கரையை ஒட்டி கிழக்கு-மத்திய அரபிக்கடலிலும் மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் நவம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
சாலைகளில் வெள்ளம், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குதல் போன்றவை ஏற்படலாம்.
முக்கிய பகுதிகளில், நகர்ப்புறங்களில் பாதாளச் சாக்கடைகள் அடைக்கக்கூடும்.
கனமழை காரணமாக அவ்வப்போது போதிய வெளிச்சம் இல்லாத சூழல் உருவாகும்.
சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் முக்கிய நகரங்களில் போக்குவரத்து இடையூறு அதிகரிக்க வாய்ப்புண்டு.
சாலைகளுக்கு சிறு சேதம், பழைய கட்டடங்கள் சேதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.
நிலச்சரிவுகள் / மண் சரிவுகள் ஏற்படலாம்
வெள்ளம் காரணமாக சில பகுதிகளில் வயல்வெளிகளில் விளைந்த பயிர்கள் சேதமடையக்கூடும்.
எனவே இதனை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.