இந்தியா

பெங்களூரு - அல்சூர் ஏரியில் ஏராளமான மீன்கள் இறந்து ஒதுங்கியதால் பரபரப்பு

கே.வி.ஆதித்ய பரத்வாஜ்

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை அடுத்த அல்சூர் ஏரியில் திங்கட்கிழமை மர்மமான முறையில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கும் போது, “வெப்பநிலை அதிகரிப்பதால் இது ஆண்டுதோறும் நிகழ்வதுதான். அதாவது தண்ணீரில் கரையும் பிராணவாயுவில் அளவு குறைவதே மீன்கள் இறப்புக்குக் காரணம்.

ஏரியிலிருக்கும் பாசி தண்ணீரில் பிராணவாயுவை வெளியிட்டாலும் நீரில் கரைந்த பிராணவாயுவை இரவு நேரங்களில் மீன்களுடன் சேர்ந்து பாசியும் பயன்படுத்தி விடுகிறது.

இதனால் நீரில் கரைந்த பிராணவாயுவின் அளவு பெரிதாக குறைகிறது. அதனால்தான் மீன்கள் இறந்து காலையில் கரை ஒதுங்குகின்றன” என்று விளக்கம் அளித்தார்.

SCROLL FOR NEXT