தேர்தல் உறுதிமொழி பத்திரத்தை பூர்த்தி செய்யவும், தேர்தல் செலவு கணக்கு விவர பட்டியல் தயாரிக்கவும், வேட்பாளர்களுக்காக சிறப்பு பயிற்சி பெற்ற ஊழியர்களை தலைமை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, தங்களது சொத்து விவரங்கள் குறித்த உறுதிமொழி பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் தேர்தலுக்காக செலவிடப்படும் பணத்துக்கு கணக்கு காட்ட வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள் செலவு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்நிலையில், வேட்பாளர்கள் அளிக்கும் கணக்கு விவரங்கள் துல்லியமாக இருக்க தலைமை தேர்தல் ஆணையம் புதிய ஊழியர்களை நியமித்துள்ளது. அவர் களுக்கு ‘ரிட்டர்ன் பிரபேரர்ஸ்’என்று பெயரிட்டுள்ளனர். வருமான வரி தாக்கல் செய்ய உதவி செய்பவர் களைப் போலவே, இவர்களும் உறுதிமொழி பத்திரத்தை பூர்த்தி செய்யவும், தேர்தல் செலவுகளை அறிக்கையாக தயாரிக்கவும் வேட் பாளர்களுக்கு உதவி செய்வர்.
‘எலக் ஷன் கமிஷன் ரிட்டர்ன் பிரபேரர்ஸ்’ (இசிஆர்பி) என்று இந்த ஊழியர்கள் அழைக்கப்படுகின்றனர். இந்த ஊழியர்கள் தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங் களிலும் பணிபுரிவார்கள்.
இணையதளம் மூலம் உறுதி மொழி பத்திரத்தை (இ-பில்லிங்) பூர்த்தி செய்தும், செலவு கணக்கு களை அறிக்கையாக தயாரித்தும் தருவார்கள். ஒரு வேட்பாளருக்கு அறிக்கை தயாரிக்க அந்த ஊழிய ருக்கு ரூ.1200 சம்பளமாக கிடைக் கும். இதனை தலைமை தேர்தல் ஆணையம் வழங்கும்.
கடந்த 2006-2007-ம் ஆண்டு வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்வதற்கு உதவியாக, ‘டேக்ஸ் ரிட்டர்ன் பிரபேரர்ஸ் ஸ்கீம்’ (டிஆர்பிஎஸ்) என்ற முறையை வரு மான வரித் துறை கொண்டு வந்தது. அந்த திட்டத்தை தலைமை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி உள்ளது. இதற்காக, சிறப்பு பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான ஊழியர்களை தேர்தல் ஆணையம் நியமித் துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘வேட்பாளர்களுக்கு உதவுவதற்காக மேற்குவங்கத்தில் 111 இசிஆர்பி ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மற்ற 4 மாநிலங்களிலும் நியமிக்கப்படுவார்கள். இதன் மூலம் வேட்பாளர்கள் துரிதமாகவும் தவறு இல்லாமலும் உறுதி மொழி பத்திரத்தையும், செலவு கணக்குகளையும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க முடியும்’’ என தெரி வித்தனர்.
மேலும், தேர்தல் நடக்கும் மாநிலங்களில் ஒவ்வொரு மாவட்டத் திலும் 2 இசிஆர்பி ஊழியர்கள் பணி யாற்றுவதை மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அந்த ஊழியர்களை தொடர்பு கொள்ளும் விவரங் களை இணையதளத்திலும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் அலுவலகங்களிலும் பார்வைக்கு வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.