2022ம் ஆண்டு பஞ்சாப்பில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலி்ல் தனது சகோதரி மாளவிகா சூட் தேர்தலில் போட்டியிடுவார் என்று பாலிவுட் நடிகர் சோனு சூட் இன்று அறிவித்தார்.
ஆனால், எந்த கட்சியி்ல் சீட் பெற்று தனது சகோகரி போட்டியிடுவார் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என நடிகர் சோனு சூட் தெரிவித்தார்.
கரோனா தொற்று காலத்தில் லாக்டவுன் கொண்டுவரப்பட்டபோது, புலம்பெயர் தொழிலாளர்களின் மெஸ்ஸையாவாக சோனு சூட் திகழ்ந்தார். பேருந்து வசதி தேவைப்படுவோருக்கு பேருந்துகள், விமான டிக்கெட்டுகள், ரயில் டிக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்து புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர் செல்ல ஏராளமான உதவிகளை சோனு சூட் செய்தார்.
கரோனாவில் பாதிக்கப்பட்ட பலருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்கவும்சோனு சூட் ஏற்பாடு செய்தார். இதனால் சோனு சூட் மிகப்பிரபலமனவராக மாறினார்.
இந்நிலையில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது சகோதரி மாளவிகா சூட்டை தேர்தலில் போட்டியிடச் செய்யப்போவதாக சோனு சூட் இன்று அறிவித்துள்ளார்.
மோகா நகரில் சோனு சூட் அளித்த பேட்டியில் “ என் சகோதரி மாளவிகா சூட் மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் சேர்வதர்கு ஆர்வமாக இருக்கிறார். ஆதலால், பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் எனது சகோதரி போட்டியிடுவார். எந்த கட்சியில் சேர்ந்து போட்டியிடுவார் என்பதை பின்னர் அறிவிப்பேன்” எனத் தெரிவி்த்தார்.இதற்கிடையே சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட், மோகா தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எந்தக் கட்சியில் இணைந்து மாளவிகா போட்டியிடுவார் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. சமீபத்தில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை சோனு சூட் சந்தித்து திரும்பினார். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சோனு சூட் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார் டெல்லி அரசின் பள்ளிக் குழந்தைகளுக்கான வழிகாட்டும் திட்டத்துக்கு சோனு சூட்டை தூதராகவும் கேஜ்ரிவால் நியமித்துள்ளார்.
சமீபத்தில் அரவிந்த் கேஜ்ரிவாலும், சோனு சூட்டும் சந்தித்துப் பேசினர். இருவருடைய சந்திப்புக் குறித்து பல்வேறுஊகங்கள் வெளியாகின. இறுதியில் சோனு சூட் அளித்த விளக்கத்தில், “ நானும், ேகஜ்ரிவாலும் அரசியல் ஏதும் பேசவில்லை” எனத் தெரிவித்தார்.