2020ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 2019-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 400 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான குற்றங்கள் பாலியல் ரீதியாக குழந்தைகளை பாலியல் ரீதியாக ஈடுபடுத்த வைக்கும் விதத்தில் படங்கள், காட்சிகளைக் காண்பித்தல் விதத்தில் குற்றங்கள் பதிவாகியுள்ளன என என்சிஆர்பி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2020ம்ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகமாக நடந்த மாநிலங்கள் வரிசையில் உத்தரப்பிரதேசம் 170 குற்றங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் 144 குற்றங்கள், மகாராஷ்டிராவில் 137, கேரளாவில் 107, ஒடிசாவில் 71 குற்றங்கள் நடந்துள்ளன.
கடந்த 2020ம் ஆண்டில் குழந்தைகளைக் குறிவைத்து 842 குற்றங்கள் நடந்துள்ளன இதில் 738 குற்றங்கள் குழந்தைகளுக்கு பாலியல்ரீதியான காட்சிகள், செயல்களை காண்பித்தல் ரீதியான குற்றங்களாகும்.
கடந்த 2019ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த 2020ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அளவு 400 சதவீதம் அதிகரித்துள்ளதாக என்சிஆர்பி தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக 164 சைபர் குற்றங்கள் நடந்திருந்தன. 2018ம் ஆண்டில் 117 குற்றங்களும், 2017ம் ஆண்டில் 79 குற்றங்களும் நடந்தன என என்சிஆர்பி தெரிவித்துள்ளது.
சைல்ட் ரைட்ஸ் அன்ட் யூ (க்ரை) அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பூஜா மராவாஹா கூறுகையில் “ கல்வி மற்றும் தகவல் தொடர்பு பரிமாற்றத்துக்காக இன்டர்நெட்டில்குழந்தைகள் அதிகமான நேரத்தை செலவிடும்போது, துரதிர்ஷ்டமாத குழந்தைகள் பல்வேறுவிதமான இடர்பாடுகளுக்கும் ஆளாகிறார்கள், சில நேரங்களில் ஆன்-லைனில் பாலியல்ரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்கள்.
ஆதலால், குழந்தைகள் செல்போன், கணனி ஆகியவற்றில் ஆன்-லைனைப் பயன்படுத்தும்போது, குழந்தைகளின் பெற்றோர், பாதுகாவலர்கள், சமூகம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். எதை குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் புரிந்து கொண்டு, அதை நெறிப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்