‘வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்தப் புத்தகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இடம்பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர்சந்தோஷ் சுக்லா சார்பில், அதன் துணைச் செயலாளர் உல்லா ஜிஇதற்கான சான்றிதழை திருமலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டியிடம் நேற்று வழங்கினார்.
திருமலை திருப்பதியில் அதிகமானோர் தலை முடி காணிக்கை செலுத்துவது, அதிக லட்டு பிரசாதம் விநியோகம், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இலவசமாக அன்ன பிரசாதம் வழங்கல்,பக்தர்களுக்காக நெருக்கடி இல்லாத வரிசைகளை ஏற்பாடு செய்தது, திருப்பதியிலிருந்து திருமலைக்கு அமைக்கப்பட்டிருக்கும் நடைபாதை மற்றும் பக்தர்களுக்கு செய்யும் சேவை ஆகியவற்றால் தேவஸ்தானம், இந்த சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதாக துணைசெயலர் உல்லா ஜி தெரிவித் தார்.
இவையெல்லாம் தேவஸ்தான ஊழியர்களின் கடின உழைப்பால் சாத்தியமானது என அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தெரிவித்தார்.