ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிரிதிக் மதுப்பூர் இடையிலான பயணிகள் ரயில் வியாழக்கிழமை இரவு மதுப்பூரை அடைந்தபோது, திருமணமான 25 வயது பெண் ஒருவரை ஒரு கும்பல் கடத்திச் சென்றுள்ளது.
இப்பெண்ணுடன் வந்த அவரது தந்தை ரயில்வே போலீஸில் புகார் செய்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணை தேடிய போலீஸார் அருகில் உள்ள தங்கல்பாரா பகுதியில் அவரை கண்டனர்.
அவர் அளித்த பாலியல் பலாத்கார புகாரின் பேரில் போலீஸார் 3 பேரை கைது செய்துள்ளனர். அப்பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீஸார், மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.