குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் 51-வது மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்றது.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் 51-வது ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அனைத்து மாநில ஆளுநர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் இதில் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த பேசுகையில் ‘‘2 வருட இடைவெளிக்குப் பிறகு இன்று சந்திக்கிறோம். நமது நாட்டில் கோவிட்19 தொற்றை எதிர்த்து போர்வீரர்களும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். இன்று 108 கோடிக்கும் அதிகமான கோவிட்19 தடுப்பூசிகளுடன், தடுப்பூசி இயக்கம் நாடு முழுவதும் தொடர்கிறது. இது நமது ஒருங்கிணைந்த செயலாக்கத்துக்கு கிடைத்த வெற்றி.’’ எனக் கூறினார்.
தண்ணீர், விவசாயம், உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு அம்ங்கள் தொடர்பாக இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. கடந்த முறை 2 நாட்கள் மாநாடு நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஓர் நாள் மட்டும் மாநாடு நடத்தப்படுகிறது.