பத்ம ஸ்ரீ விருது பெற்ற துளசி கவுடாவை பாராட்டும் பிரதமர் மோடி. 
இந்தியா

மூதாட்டியை வணங்கிய மோடி, அமித் ஷா

செய்திப்பிரிவு

கர்நாடகாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக பாடுபட்ட துளசி கவுடாவுக்கு (77) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார். செருப்பு கூட அணியாமல் எளிமையான தோற்றத்தில், நிகழ்வில் பங்கேற்ற துளசி கவுடாவை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கையெடுத்து கும்பிட்டு வணங்கினர். துளசி கவுடாவின் கரங்களை மோடி பற்றி நெகிழ்ச்சியோடு பாராட்டு தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராமில் இப்புகைப்படத்தை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திள்ளார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தன் ட்விட்டர் பக்கத்தில், ''கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான துளசி கவுடா 30 ஆயிரம் மரங்களை நட்டுள்ளார். 6 த‌சாப்தங்களாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக உழைத்து வருகிறார்'' என வாழ்த்தியுள்ளார்.

SCROLL FOR NEXT