காங்கிரஸ் ஆட்சியில் அகஸ்டெெவஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நிறுவனம் என்று குற்றம்சாட்டப்பட்ட ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்துடன் மத்தியில் ஆளும் மோடி அரசு என்ன ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2-வதுமுறையாக ஆட்சியில் இருந்தபோது, இந்திய விமானப்படைக்கு விவிஐபி நபர்கள் பயணிக்க 12-ஏடபிள்யு -101 ஹெலிகாப்டர் வாங்க பிரி்ட்டனின் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டரை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தைப் பெற காங்கிரஸ் தலைவர்கள் ரூ.450 கோடி லஞ்சம் பெற்றதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்துடன் செய்திருந்த ஒப்பந்தத்தையும் அப்போதைய மத்திய அரசு ரத்து செய்தது. இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு கூறப்பட்ட ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்தை தடை செய்திருந்தது மத்தியஅரசு ஆனால், சமீபத்தில் அந்த நிறுவனத்துக்கான தடையும் நீக்கப்பட்டு, அந்த நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்யவும் தடையை மத்தியஅ ரசு நீக்கியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில்அவர்கூறுகையில் “ மோடி அரசுக்கும்,அஸ்டா-ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்துக்கும் இடையே என்ன ரகசிய ஒப்பந்தம் இருக்கிறது.
இப்போது ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்துடன் வர்த்தகம் செய்யலாமா. மோடியும் அவரின் அரசும் போலித்தனமாக ஊழல் குற்றச்சாட்டை அந்த நிறுவனத்தின் மீது சுமத்திவிட்டு, அதே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்கிறார்கள். இதற்கு அர்த்தம், நீங்கள் கூறிய போலி ஊழல் குற்றச்சாட்டு குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது அப்படித்தானே. தேசம் பதிலுக்காக காத்திருக்கிறது.
ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யும் தடையையும் மத்திய அரசு நீக்கியுள்ளது.
ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்தை மோடி ஊழல் என்றார். உள்துறை அமைச்சர் போலிநிறுவனம் என்று குற்றம்சாட்டினார். முன்னாள் பாதுகாப்புத்துறைஅமைச்சர் ஊழல் மற்றும் லஞ்சம் கொடுக்க முயன்ற நிறுவனம் என நாடாளமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த 2014- ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி, அகஸ்டா,ஃபி்ன்மெக்கானிக்கா நிறுவனத்தை கறுப்புப்பட்டியலில் இருந்து நீக்கியது மத்தியஅரசு, இப்போது கொள்முதலுக்கான தடையையும் நீக்கியுள்ளது.
2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, மோடிஅரசு கசியவிட்ட ஆவணங்களை காண்பிக்கவும் காங்கிரஸ் தலைைமயிலான ஐக்கிய முற்போக்குகூட்டணி அரசுக்கு எதிராக, அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான குற்றச்சாட்டுகளை சித்தரிக்க பிரண்ட்ஸ்ஆப்தி மீடியா, ஆயிரக்கணக்கான மணிநேரம் செலவிட்டது. இப்போது அகஸ்டா நிறுவனத்துடன் மோடி அரசு வைத்திருக்கும் ரகசிய ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்ப துணிச்சல் இருக்கிறதா.
இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.