விருது பெறும் சுல்டிம் 
இந்தியா

2-வது நாளாக பத்ம விருது வழங்கும் விழா: 40 கிலோ மீட்டர் சாலை அமைத்த சுல்டிம் சோஞ்சோருக்கு  விருது

செய்திப்பிரிவு

லடாக்கில் 40 கிலோ மீட்டர் சாலை அமைத்து பெரும் சாதனை படைத்த சுல்டிம் சோஞ்சோருக்கு பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

மத்திய அரசு பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்பான பணிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. 2020ஆம் ஆண்டு 141 பேருக்கும், 2021-ஆம் ஆண்டில் 119 பேருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.

கரோனா பேரிடர் காரணமாக, கடந்த ஆண்டு பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்றும் இன்றும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இன்று இரண்டாவது நாளாக விருதுகள் வழங்கப்பட்டன.

மக்களவை முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. விருதை அவரது மகன் சிராக் பாஸ்வான் பெற்றுக் கொண்டார்.

அசாம் முன்னாள் முதல்வர் மறைந்த தருண் கோகோய்க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. அந்த விருதை அவரது மனைவி டோலி கோகோய் பெற்று கொண்டார்.

லடாக்கைச் சேர்ந்த சுல்டிம் சோஞ்சோருக்கு சமூகப் பணிக்காக பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். லடாக்கில் உள்ள ராம்ஜாக் முதல் கார்க்யாக் கிராமம் வரையிலான 40 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை உருவாக்கி சாதனை புரிந்தவர் சுல்டிம் ஆவார்.

காடுகளின் கலைக்களஞ்சியம் துளசி கவுடா பத்மஸ்ரீ பெற்றார்

தமிழகத்தைச் சேர்ந்த சாலமன் பாப்பையா, தமிழக வீராங்கனை அனிதா உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கினார்.

SCROLL FOR NEXT