பூபேஷ் பாகேல் 
இந்தியா

கோவர்த்தன பூஜையில் சடங்கு: சத்தீஸ்கர் முதல்வருக்கு சவுக்கடி

செய்திப்பிரிவு

சத்தீஸ்கரில் கோவர்த்தன பூஜையின் ஒரு பகுதியாக நடை பெற்ற சடங்கில் முதல்வர் பூபேஷ் பாகேல் சவுக்கால் அடிக்கப்படும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சத்தீஸ்கர் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் தீபாவளிக்கு அடுத்த நாள் பகவான் கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாக தூக்கி மக்களை காத்தார் என்ற நம்பிக்கையின்படி கோவர்த்தன பூஜை கொண்டாடப்படுகிறது. சத்தீஸ்கரில் ஆண்டுதோறும் துர்க் மாவட்டம் ஜன்கிரி என்ற கிராமத்தில் நடக்கும் பூஜையில் முதல்வர் பூபேஷ் பாகேல் கலந்து கொள்வார். பூஜையின் ஒரு பகுதி யாக நடக்கும் சடங்கில் கலந்து கொள்பவர்களுக்கு சவுக்கடி வழங்கப்படும். இதன் மூலம் பிரச் சினைகள் நீங்கி வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டு நடந்த கோவர்த்தன பூஜையில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கலந்து கொண்டார். பூஜையின் போது பூபேஷ் பாகேல் தனது வலது கையை நீட்டியபடி 8 சவுக்கடிகளை பெற்றுக் கொண்டார். அப்போது பூஜையில் பங்கேற்க வந்தவர்கள் இந்தக் காட்சியை பார்த்தனர். கடந்த ஆண்டும் இதேபோல பூஜையில் கலந்து கொண்டு பூபேஷ் பாகேல் சவுக்கடி வாங்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

கோவர்த்தன பூஜையில் தான் சவுக்கடி வாங்கும் காட்சியை முதல்வர் பூபேஷ் பாகேல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட் டுள்ளார்.

இந்தக் காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. ‘இதுபோன்ற சடங்குகள் விவசாயி களின் நன்மைக்காகவே பின் பற்றப்படுகின்றன. இவை நம்மை பணிவாக வைத்திருக்கும்’’ என்று முதல்வர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார். துயரங்களை முடிவுக்கு கொண்டு வரவும் மாநில நலனுக்காகவும் ஆண்டுதோறும் இந்த பூஜையில் பூபேஷ் பாகேல் கலந்து கொள்கிறார் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித் துள்ளது. -பிடிஐ

SCROLL FOR NEXT