சமீர் வான்கடே 
இந்தியா

ஆர்யன் கான் வழக்கில் இருந்து விசாரணை அதிகாரி சமீர் வான்கடே நீக்கம்

செய்திப்பிரிவு

கடந்த மாதம் 3-ம் தேதி மும்பையில் இருந்து கோவாவுக்கு புறப்பட்ட சொகுசு கப்பலில்போதைப் பொருள் தடுப்புப்பிரிவு (என்சிபி) அதிகாரிகள்திடீர் சோதனை நடத்தினர். அங்குநடந்த கேளிக்கை விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக நடிகர்ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டனர். அண்மையில் ஆர்யன் கான் ஜாமீனில் விடுதலையானார்.

இந்த வழக்கை என்சிபியின் பிராந்திய இயக்குநர் சமீர் வான்கடே விசாரித்தார். பல்வேறு வழக்குகளில் அவர்கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டினார். இந்நிலையில் ஆர்யன் கான்போதைப் பொருள் வழக்கில் இருந்து விசாரணை அதிகாரிசமீர் வான்கடே நீக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு என்சிபி-ன்மத்திய குழுவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து சமீர் வான்கடே கூறும்போது, “ஆர்யன் கான் வழக்கை மத்திய பிரிவு அல்லது டெல்லி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து என்சிபி வட்டாரங்கள் கூறும்போது, “தேசிய, சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற 5 வழக்குகள் மத்திய பிரிவின் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதில் ஆர்யன் கான் வழக்கும் ஒன்று”என்று தெரிவித்தன.

SCROLL FOR NEXT