இந்தியா

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை: சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

பிடிஐ

மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அளித்த பதில்:

தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, இரு நாட்டு மீனவர்கள் இடையே பல தடவை பேச்சுவார்த்தை நடைபெற்றபோதும் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

சமீபத்தில் இலங்கைக்கு சென்றிருந்தபோது, மீனவர் விவகாரம் குறித்து அந்நாட்டு அதிபர், பிரதமர், வெளியுறவு அமைச்சரிடம் விவாதித்தேன். அப்போது, இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, இலங்கை மீன்வளத் துறை அமைச்சரை வரும் மே மாதம் இந்தியாவுக்கு அனுப்பிவைப் பதாக அவர்கள் தெரிவித்தனர். அப்போது மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT