இந்தியா

ஜல்லிக்கட்டு விசாரணை: உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு வழக்கின் அடுத்த விசார ணையை வரும் ஜூலை 26-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தமிழகத்தில் பாரம்பரியமிக்க ஜல்லிக் கட்டு வீர விளையாட்டு போட்டியின் போது காளை மாடுகள் சித்ர வதைக்கு ஆளாக்கப்படுவதால், இதற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இந்த தீர்ப்புக்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களும், ஜல்லிக் கட்டு வீரர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித் தனர். இந்நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி இருந்தார்.

இதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டிருந்தது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு விழா ஏற்பாட்டாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். எனினும் அதற்கு அடுத்த நாளே மத்திய அரசின் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத் தில் விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.

இந்நிலையில் விலங்குகள் நல ஆர்வ லர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசா ரணைக்கு வந்தது. அப்போது அவர்களது மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், ‘ஜல்லிக்கட்டு நடக்காத பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கு தேவையற்றது’ என தெரிவித்தனர். மேலும் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஜூலை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதற்கிடையில், வீர விளையாட்டு மீட்புக் கழகத்தையும் இவ்வழக்கில் மனுதாரராக சேர்க்கக் கோரி, அந்த அமைப்பின் தலைவர் ராஜேஷ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

SCROLL FOR NEXT