தெற்கு காஷ்மீர், புல்வாமா மாவட் டத்தில் பாதுகாப்பு படையினருடன் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகள் கொல்லபட்டனர்.
புல்வாமா மாவட்டம், ட்ரால் பகுதியில் உள்ள தத்சரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாது காப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, “கொல்லப் பட்ட மூவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த உள்ளூர் தீவிரவாதிகள். இவர்கள் ஆஷிக் உசேன் பட், முகம்மது இசாக் பாரி, ஆசிப் அகமது மீர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு உதம்பூரில் ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி களுக்கு ஆஷிக் உசேன் பட் அடைக்கலம் அளித்தவர்” என்றார்.