இந்தியா

‘‘விவசாயிகளின் வெற்றி’’- ஹரியாணாவில் அபே சவுதாலா முன்னிலை

செய்திப்பிரிவு

விவசாய சட்டங்களை எதிர்த்து பதவி விலகிய அபே சவுதாலா, ஹரியாணா மாநிலம் எல்லனாபாத் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் முன்னிலை வகிக்கிறார்.

ஹரியாணாவில் ஐஎன்எல்டி (இந்திய தேசிய லோக் தளம்) எம்எல்ஏ அபே சவுதாலா கடந்த ஜனவரியில் பதவி விலகியதால் இங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். எல்லனாபாத் தொகுதியில் ஐஎன்எல்டி கட்சித் தலைவர் அபே சவுதாலா மீண்டும் போட்டியிட்டார். அந்த தொகுதியில் 73 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகின.

அபே சவுதாலாவின் தலைவரின் மருமகன் துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா ஆளும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளார். அவர் பாஜக வேட்பாளரை ஆதரித்தார். காங்கிரஸ் சார்பில் பவன் பெனிவால் போட்டியிட்டார்.

ஹரியாணா மாநிலம் எல்லனாபாத் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட இந்திய தேசிய லோக்தள கட்சித் தலைவர் அபய் சவுதாலா, ஆளும் பாஜக வேட்பாளர் கோபிந்த் காந்தாவை விட கூடுதலாக 6,700 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரது வெற்றி ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

சௌதாலாவின் தேர்தல் வெற்றி ஆளும் பாஜகவின் விவசாயச் சட்டங்களுக்கு எதிரான வாக்காக பரவலாகக் கருதப்படுகிறது அபே சவுதாலா விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருகிறார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய சௌதாலா கூறியதாவது:

வாக்குகளைப் பெறுவதற்காக பாஜக பணம் விநியோகித்தது. இல்லையெனில் 30,000 வாக்குகளுக்கு மேல் வெற்றி பெறுவேன். முதல்வர் கட்டார் பதவி விலக வேண்டும். வாக்குகளுக்காக இத்தனை கோடிகள் விநியோகிக்கப்பட்டது, அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டது. இது எனது வெற்றியல்ல... விவசாயிகளின் வெற்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT