இந்தியா

விவாதக்களம்: விருப்பம் இல்லாத மனைவியுடன் கட்டாய உறவு கிரிமினல் குற்றமா?

செய்திப்பிரிவு

உலக நாடுகளில் பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் விருப்பம் இல்லாத மனைவியுடன் கட்டாயமாக பாலியல் உறவு கொள்வது கிரிமினல் குற்றமாக கருதப்படுகிறது.

ஆனால், இந்தியாவில்?

மனைவியை கட்டாயப்படுத்தி கணவர் உறவு கொள்வதை கிரிமினல் குற்றமாக்கினால் குடும்ப உறவு முறை சீர்குலைந்து விடும் என்று நாடாளுமன்ற குழு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

திருமண பந்தத்தில் கட்டாய உறவு என்றால் என்ன?

ஒரு ஆண் தன் மனைவியின் விருப்பத்தை மீறி உறவு கொள்வதே கட்டாய உறவு. மனைவியை கணவன் அடித்து துன்புறுத்துவது சட்டத்தில் தண்டனைக்குரிய குற்றம் என்றால், அவள் விருப்பத்துக்குப் புறம்பாக உறவு கொள்வதும் தண்டனைக்குரிய குற்றமே. அதுவும் ஒருவகையில் பாலியல் பலாத்காரமே. வன்புணர்ச்சி யார் செய்தாலும் தவறே. அது கணவனாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி என சமூக ஆர்வலர்கள் பலர் கூறுகின்றனர்.

குடும்ப உறவு சீர்குலையும்:

வறுமை, கல்வி அறிவின்மை மேலோங்கிய நம் சமூகத்தில், மத நம்பிக்கைகள் வேரூன்றியிருக்கும் சமுதாயத்தில் திருமண பந்தத்தில் கட்டாய உறவு கூடாது என்ற வாதத்தை முன்வைப்பது ஏற்புடையதல்ல எனக் கூறப்படுகிறது.

வாசகர்களே இப்பிரச்சினையில் தங்கள் கருத்துகளை இங்கே பதிவிட்டு ஒரு ஆக்கபூர்வமான விவாதத்துக்கு வழிவகுக்கவும்.

SCROLL FOR NEXT