ஆதிரஞ்சன் சவுத்திரி 
இந்தியா

‘‘அரசியல் துரோகிகள்’’- மம்தா பானர்ஜி மீது காங்கிரஸ் கடும் சாடல்

செய்திப்பிரிவு

காங்கிரஸின் எதிர்காலம் முடிந்து விட்டதாக கூறும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் துரோகிகள் என்றே அழைக்கப்படுவார்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி விமர்சித்துள்ளார்.

கோவா சட்டப் பேரவைக்கு 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த தேர்தலில் சில இடங்கள் வித்தியாசத்தில் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போன காங்கிரஸ் கட்சி, இம்முறை தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளது. அதேசமயம் அங்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறது.

இந்தநிலையில் கோவாவில் பிரச்சாரம் செய்ய வந்த திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில் ‘‘ காங்கிரஸால் தான் பிரதமர் மோடி இன்னும் பலமாகப் போகிறார். ஏனென்றால் பாஜகவின் டிஆர்பி எனப்படும் தொலைக்காட்சி ரேட்டிங் புள்ளிகள் தான் காங்கிரஸ். அந்த கட்சி சரியான முடிவெடுக்க முடியாவிட்டால் நாடு பாதிக்கப்படும். நாடு ஏன் இந்த பாதிப்படைய வேண்டும். காங்கிரஸுக்கு போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு விட்டன. இனிமேலும் தேசம் அவர்களுக்கு வாய்ப்பு வழங்காது.

மேற்குவங்க தேர்தலில் பாஜகவுக்கு எதிராகப் போட்டியிடுவதற்குப் பதிலாக காங்கிரஸ் என்னை எதிர்த்துப் போட்டியிட்டது. நாங்கள் மாநில கட்சிகளை இணைத்து செயலாற்ற விரும்புகிறோம். இதன் பிறகு மத்தியிலும் நாங்கள் வலிமையாவோம்’’ எனக் கூறியிருந்தார்.

இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி மம்தாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதகுறித்து அவர் கூறியதாவது:

காங்கிரஸில் இருந்து பிறந்த குழந்தை தான் திரிணமூல் காங்கிரஸ். ஒரு குழந்தை தனது தாயிடம் அவர் எதிர்காலம் ம முடித்துவிட்டதாகச் சொன்னால், தாங்களது முடித்துவிட்டதாகவும் அர்த்தம்.

அவர்கள் அரசியல் துரோகிகள் என்றே அழைக்கப்படுவார்கள். அவர்கள் அரசியல் செய்கிறார்கள், ஆனால் பண்பாடு, பழக்கவழக்கம், தங்கள் வந்த இடம் ,சொந்த நிலையை மறந்து பேசுகிறார்கள். இவ்வாறு பேசும் முன்பாக அவர்கள் எந்தக் கட்சியில் இருந்து பிறந்தவர்கள் என்பதைப் பார்த்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT