இந்தியா மியான்மர் எல்லையில் இருந்து அசாம் ரைபில்ஸ் படை வாபஸ் இல்லை என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
இந்தியா மியான்மர் எல் லையை அசாம் ரைபில்ஸ் படை பாதுகாத்து வருகிறது. இந்நிலை யில் இந்தப் படையினரை அங் கிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டு இந்தோ திபெத் எல்லை போலீஸ் படையிடம் மியான்மர் எல்லையை காக்கும் பொறுப்பை மத்திய அரசு ஒப்படைக்க இருப்ப தாக தகவல் வெளியானது.
முன்னதாக எல்லை பாது காப்பு படையும் இப்பணிக்கு பரிசீலிக்கப்பட்டது. இது தொடர் பாக பணி மதிப்பீட்டு அறிக்கையும் எல்லை பாதுகாப்பு படை தயாரித்தது.
இந்நிலையில் அசாம் ரைபில்ஸ் படை நிறுவப்பட்டதன் 181-வது ஆண்டு விழா மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், “இது தொடர் பாக நாங்கள் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எந்த நேரமும் எந்தவொரு முடிவு எடுத்தாலும் அதை உங்களிடம் தெரிவிப்போம்” என்றார்.
இந்தியாவும் மியான்மரும் வேலியிடப்படாத 1,643 கி.மீ. எல்லையை கொண்டுள்ளன. அருணாச்சலப்பிரதேசம் (520 கி.மீ), நாகாலாந்து (215 கி.மீ), மணிப்பூர் (398 கி.மீ), மிசோரம் (510 கி.மீ) ஆகிய மாநிலங்கள் இந்த எல்லையை கொண்டுள்ளன. இந்த எல்லையில் 16 கி.மீ. வரை மக்கள் தடையின்றி சென்றுவர அனுமதிக்கப்படுகின்றனர்.