விவசாயிகள் போராட்டம் நடத்திய டெல்லி - உத்தர பிரதேச எல்லையில் அமைக்கப்பட்டிருந்த சாலை தடுப்புகள் நேற்று அகற்றப்பட்டன. படம்: பிடிஐ 
இந்தியா

விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் டெல்லி எல்லையில் தடுப்புகள் அகற்றம்

செய்திப்பிரிவு

விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் டெல்லி எல்லை பகுதியில் சாலை தடுப்புகள் நேற்று அகற்றப்பட்டன.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி முதல் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு தொடர் போராட் டம் நடத்தி வருகின்றனர். விவ சாயிகளின் போராட்டத்தால் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை மறித்து போராட்டம் நடத்தக்கூடாது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த விவசாயிகள், நாங்கள் சாலையை மறிக்கவில்லை, போலீஸாரே தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்தை முடக்கியுள்ளனர் என்று விளக்கமளித்தனர்.

சாலை போக்குவரத்தை சீர் செய்யுமாறு டெல்லி போலீஸாருக்கு அறிவுரை கூறிய நீதிபதிகள், விவசாயிகள் சாலையை ஆக்கிரமிக்கக்கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து டெல்லி-உத்தர பிரதேச எல்லையில் சாலை தடுப்புகள் நேற்று அகற்றப்பட்டன. விவசாயிகளை தடுக்க இரும்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்தகம்பி வேலிகளும் துண்டிக் கப்பட்டு, சாலையில் இருந்து அகற்றப்பட்டன.

இதுகுறித்து டெல்லி கிழக்கு காவல் ஆணையர் பிரியங்கா காஷ்யப் கூறும்போது, "என்.எச்.24 நெடுஞ்சாலை போக்கு வரத்துக்கு ஏற்கெனவே திறக்கப் பட்டுவிட்டது. தற்போது என்.எச்.9 நெடுஞ்சாலையில் அமைக் கப்பட்டிருந்த தற்காலிக தடுப்புகள் அகற்றப்பட்டு, அந்த சாலையிலும் போக்குவரத்து தொடங்கியுள்ளது" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT