இந்தியா

மத்திய அரசில் விரைவாக முடிவெடுக்க புதிய திட்டம்; 4 பேருக்குள் கோப்புகளை இறுதி செய்ய வேண்டும்: புதிய சீர்திருத்தம் அடுத்த மாதம் முதல் அமல்

செய்திப்பிரிவு

அதிகார வர்க்கத்தினரால் முடிவுகள் எடுப்பதில் ஏற்படும் கால தாமதத்தைத் தடுக்க புதிய சீர்திருத்தத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. 4 அதிகாரிகளுக்கு மேல் வேறு எந்த அதிகாரியின் அனுமதிக்காகவும் ஒருகோப்பு காத்திருக்க தேவையில்லை. இதை உறுதி செய்யும் வகையில் புதிய சீர்திருத்தத்தை அடுத்த மாதம் முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஒரு அமைச்சகத்தில் முக்கிய முடிவு எடுப்பதற்கு அதிக பட்சம்நான்கு பேருக்கு மேல் ஒப்புதலுக்கு ஒரு கோப்பு செல்ல வேண்டியதில்லை. நான்கு அதிகாரிகள் ஒப்புதலுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அமைச்சகம் அதற்குரிய நடவடிக்கை எடுக்கும்.

எந்த ஒரு கொள்கை முடிவு மற்றும் ஒப்புதல் விரைவாக எடுக்க இந்த நடைமுறை உதவும்என மத்திய அரசு உறுதியாக நம்புகிறது. அதிகார வர்க்கத்தினரால் ஏற்படும் கால தாமதத்தைத் தடுக்கும் பொருட்டு மோடி தலைமையிலான அரசு இந்த முடிவைஎடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 58 அமைச்சகம் ஒரு கோப்பு தொடர்பாக முடிவெடுக்கும் வழிவகை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும். இதன்படி ஒருகோப்பு அதிகபட்சம் 4 அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டு அமைச்சகத்திடம் வரும் வகையில்வழிகாட்டுதல் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு மோடி அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு 10 முதல் 12 நிலைகளில் ஒப்புதல் பெற வேண்டும். இது 2015-ல் 6 முதல் 7 நிலைகளாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ஏறக்குறைய அதிகாரிகள் நிலையில் 300 ஆலோசனைக் கூட்டங்களை அரசு நடத்தி இப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 6 ஆண்டு களில் தற்போது இந்த நிலை எட்டப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் இ-அலுவலகம் 7.0 என்பதை அரசு அறிவித்து செயல்படுத்தியது. இதனால் அமைச்சகங்கள் இடையே கோப்பு கள் இணையதளம் மூலமாக பரிவர்த்தனை செய்து ஒப்புதல் பெறுவதற்கான நடைமுறை செயல்படுத்தப்பட்டது. தற்போது அனைத்து அமைச்சகங்களும் இணைய வழி கோப்பு ஒப்புதல் அளிக்கும் முறையை செயல்படுத்தி வருகிறது. இதுவரையில் 32 ஆயிரம் இ- கோப்புகள் தினசரி உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை யில் 25 லட்சம் இ-கோப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.

நான்கு நிலைகளாக துறையின் செயலர், கூடுதல் செயலர் அல்லது இணைச் செயலர், இயக்குநர் அல்லது இணை இயக்குநர் மற்றும் துணைச் செயலர் என 4 நிலைகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு இவர்கள் நான்கு பேரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு கோப்புகள் அனுப்பப்படும்.

இந்த நடைமுறையை அனைத்து அமைச்சகங்களும் தற்போது செயல்படுத்தி வருகின்றன. இதை செயல்படுத்துவதன் மூலம் அனைத்து நிலைகளிலும் அதிகாரம் பரவலாக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள் ளார்.-பிடிஐ

SCROLL FOR NEXT