பிஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து மத்தியப் பிரதேசம் வழியாக மகாராஷ்டிரா தலைநகர் மும்பை வரை பாடலிபுத்ரா விரைவு ரயில் இயக்கப்படுகிறது. கடந்த மாதம் 25-ம் தேதி இந்த ரயிலில் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரை சேர்ந்த சுமித் கச்சி (25) என்ற இளைஞரும் பயணம் செய்தார். தாகம் எடுத்ததால் அந்த பெட்டியில் பயணித்த மற்றொரு பயணியின் குடிநீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் அருந்தினார். முன் அனுமதி பெறாமல் அவர் குடிநீர் அருந்தியதால் அந்த பயணி ஆத்திரம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சுமித் கச்சியை தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து ரயிலின் வெளிப்புற ஜன்ன லில் கட்டி வைத்து தாக்கியுள்ளார். இந்த காட்சியை சக பயணி ஒருவர் தன் மொபைலில் வீடியோ வாக பதிவு செய்து சமூக வலை தளங்களில் பதிவேற்றினார். வைரலாக பரவிய இந்த வீடியோ காட்சியை பார்த்த போலீஸார், உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்தனர்.
இது குறித்து இடார்சி ரயில் நிலைய பொறுப்பாளரான ஜோஷி கூறும்போது, ‘‘இந்த சம்பவம் தொடர்பாக பாட்னாவை சேர்ந்த மாணவர்களான விக்கி (24), ரவி (25) மற்றும் பல்ராம் (24) ஆகியோரை போலீஸார் அன்றைய தினமே கைது செய்தனர் என்றார்.