சோனியா 
இந்தியா

காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணியில் விரிசல்: லாலுவுடன் பேசினார் சோனியா காந்தி

செய்திப்பிரிவு

பிஹாரில் காங்கிரஸுடன் நீண்டகாலமாக கூட்டணி வைத்து வரும் கட்சிகளுள் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் (ஆர்ஜேடி) ஒன்று. இந்த சூழலில், கடந்த திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த லாலு பிரசாத், “காங்கிரஸுடன் கூட்டணியில் இருப்பதால் எங்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிட்டது” எனக் கூறினார்.

இந்நிலையில், கூட்டணி முறிந்து விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, லாலு பிரசாத்தை சோனியா காந்தியே நேற்று தொலைபேசியில் அழைத்து பேசியதாக தெரிகிறது. அப்போது அவர், கூட்டணிக்குள் எந்தப் பிரச்சினை என்றாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என லாலுவிடம் கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் காங்கிரஸின் கீழ் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் சோனியா காந்தி ஈடுபட்டுள்ளார். இதுபோன்ற சமயத்தில், கூட்டணிக் கட்சிகள் பிரிந்து செல்வது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தே, சோனியா காந்தி கவனமாக காய் நகர்த்தி வருவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். -பிடிஐ

SCROLL FOR NEXT