இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,451 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 585 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 13,451. இது அதற்கு முந்தைய நாளைவிட 10% குறைவானது. இதில் கேரளாவில் மட்டும் 7,163 பேருக்கு தொற்று உறுதியானது.
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,42,15,653.
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 14,021.
இதுவரை குணமடைந்தோர்: 3,35,97,339.
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 585. இதில் கேரளாவில் மட்டும் 90 பேர் உயிரிழந்தனர்.
கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,55,653.
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,62,661. இது கடந்த 242 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைவு.
இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,03,53,25,577 கோடி. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 55,89,124 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.