இந்தியா

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும்: கேரள ஆளுநர் கருத்து

செய்திப்பிரிவு

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

முல்லைப் பெரியாறு அணை மிகவும் பழமையானது என்பது எல்லாருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். புதிய அணை கட்டப்பட வேண்டும். பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காண பேச்சுவார்த்தை நடக்கிறது. தமிழக அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டால் நீதிமன்றங்கள் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும் அணைக்கு ஆபத்து என்று சமூக வலைதளங்களில் வதந்திபரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பினராயி விஜயன் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

அணையில் பராமரிக்கப்படும் அதிகபட்ச நீர்மட்டம் குறித்து உறுதியான முடிவு எடுக்குமாறு கண்காணிப்புக்கு குழுவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகளுடன் கேரள அரசு அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் பேச்சு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT