கோப்புப்படம் 
இந்தியா

கரோனா தடுப்பூசி ஏற்றுமதி ஆண்டு இறுதியில் தொடக்கம்

செய்திப்பிரிவு

இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியும் விநியோகமும் துரிதப்படுத்தப்பட்டதை அடுத்து கடந்த அக்டோபர் 21-ம் தேதி 100 கோடி தடுப்பூசிகள் செலுத்திய இலக்கை எட்டியது. எனவே பிற நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளதாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரி தெரிவித்துள்ளார். உலகிலேயே இந்தியா பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக விளங்குகிறது. உள்நாட்டுக்கு தேவையான தடுப்பூசிகளை விநியோகம் செய்வதோடு உபரி உற்பத்தியை ஏற்றுமதி செய்யவும் தடுப்பூசி நிறுவனங்கள் தயாராக உள்ளன.

ஏப்ரல் மாதம் தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதித்த நிலையில் தற்போது ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. சமீபத்தில் வங்கதேசம், மியான்மர் மற்றும் நேபாளம் ஆகிய அண்டை நாடுகளுக்கு தடுப்பூசி கள் வழங்கப்பட்டுள்ளன. ஆண்டு இறுதியில் பிற நாடுகளுக்கும் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 75 சதவீதத்தினருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

- பிடிஐ

SCROLL FOR NEXT