இந்தியா

7 ஆண்டுகளுக்கு முன்பு ஊழல் சக்கரம்  24 மணிநேரமும் சுழன்று கொண்டிருந்தது: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

செய்திப்பிரிவு

7 ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் இருந்த அரசுகளும், 4 ஆண்டுகளுக்கு முன் உத்தரப் பிரதேசத்தில் இருந்த அரசும் வாக்குகளுக்காக வேலை செய்தன, அப்போது ஆயிரக்கணக்காண கோடி ரூபாய் எனும் ஊழல் சக்கரம் ஓய்வில்லாமல் 24 மணிநேரமும் சுழன்று கொண்டிருந்தது என பிரதமர் மோடி கூறினார்.

உத்தர பிரதேசத்தில் இன்று 9 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

ஏராளமான கர்ம யோகிகளின் பல பத்தாண்டுகள் கடின உழைப்பின் விளைவுதான் மத்திய அரசும் உத்தரப் பிரதேச அரசும் . மறைந்த மாதவ் பிரசாத் திரிபாதி அவர்களைப் போன்ற வடிவில் அர்ப்பணிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியையும் சித்தார்த் நகர் நாட்டுக்கு வழங்கி உள்ளது. இவர்களின் ஓய்வில்லாத கடின உழைப்பு இன்று நாட்டிற்கு உதவி செய்கிறது. சித்தார்த் நகரின் புதிய மருத்துவக் கல்லூரிக்கு மாதவ் பாபு பெயர் சூட்டப்பட்டிருப்பது அவரது சேவைக்கு உண்மையான அஞ்சலியாகும்

கல்லூரி படிப்பு முடித்து வெளியே வரும் இளம் மருத்துவர்களுக்கு மக்கள் சேவை செய்வதற்கான ஊக்கம் அளிப்பதை மாதவ் பாபுவின் பெயர் தொடரும். 9 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருப்தை அடுத்து சுமார் இரண்டாயிரத்து ஐநூறு புதிய படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்குப் புதிதாக வேளைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு மருத்துவக் கல்வியின் புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசுகளால் ஏற்பட்ட மூளைக்காய்சசல் காரணமான சோகமான உயிரிழப்புகளால் பூர்வாஞ்சலின் புகழ் கெடுக்கப்பட்டது. அதே பூர்வாஞ்சல், அதே உத்தரப் பிரதேசம் இந்தியாவின் கிழக்குப்பகுதிக்கு ஆரோக்கியத்தின் புதிய ஒளிக்கீற்றை வழங்கப்போகின்றன .

உத்தரப் பிரதேசத்தின் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இந்த மாநிலத்தின் மோசமான மருத்துவ முறையின் சிரமங்களை நாடாளுமன்றத்தில் விவரித்தார். உத்தரப் பிரதேச மக்களால், சேவை செய்ய வாய்ப்பளிக்கப்பட்ட யோகி அவர்கள் மூளைக்காய்ச்சல் நோய் பரவலைத் தடுத்து நிறுத்தி இந்தப் பகுதியின் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றியவர்.

அரசு உணர்வுபூர்வமாக இருக்கும் போது, ஏழைகளின் வலியைப் புரிந்து கொள்ள மனதில் இரக்க உணர்வு ஏற்படும். இதன் பின், நல்ல செயல்பாடுகள் நடைபெறும்.

இம்மாநிலத்தில், ஏராளமான மருத்துவக் கல்லூரிகளின் அர்ப்பணிப்பு முன் எப்போதும் காணப்படாதது .இது ஏற்கெனவே நடைபெறவில்லை , இப்போது ஏன் நடைபெறுகிறது இதற்கு ஒரே ஒரு காரணம்தான் உள்ளது. அரசியல் உறுதி மற்றும் அரசியல் ரீதியான முன்னுரிமை தான் அது. 7 ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் இருந்த அரசுகளும் 4 ஆண்டுகளுக்கு முன் உத்தரப் பிரதேசத்தில் இருந்த அரசும் வாக்குகளுக்காக வேலை செய்தன. வாக்குகளைக் கருத்தில் கொண்டு சில மருந்தகங்கள் அல்லது சிறிய மருத்துவமனைகள் பற்றிய அறிவிப்புகளால் திருப்தியடைந்தன. நீண்ட காலமாகக் கட்டிடம் கட்டப்பட்டிருக்காது, கட்டிடம் கட்டப்பட்டிருந்தால் கருவிகள் இருக்காது, இவை இரண்டுமே செய்யப்பட்டிருந்தால் மருத்துவர்களோ இதர ஊழியர்களோ இருக்கமாட்டார்கள் . ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயிரக்கணக்காண கோடி ரூபாய் எனும் ஊழல் சக்கரம் ஓய்வில்லாமல் 24 மணிநேரமும் சுழன்று கொண்டிருந்தது.

2014-க்கு முன் நமது நாட்டில் மருத்துவ இடங்கள் 90,000-க்கும் குறைவாக இருந்தன . கடந்த 7 ஆண்டுகளில் 60,000 புதிய மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டன. உத்தரப் பிரதேசத்திலும்கூட 2017 வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1900 மருத்துவ இடங்கள் மட்டுமே இருந்தன. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இரட்டை எஞ்சின் அரசால் 1900-க்கும் அதிகமான இடங்கள் கூடுதலாகி உள்ளன.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

SCROLL FOR NEXT