இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் கரோனாவுக்கு 561 பேர் பலி: 2வது நாளாக உயிரிழப்பு அதிகரிப்பு

ஏஎன்ஐ

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,906 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 561 பேர் உயிரிழந்தனர். நேற்றைய முன் தினம், 666 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். இரண்டாவது நாளாக உயிரிழப்பு 500க்கு மேல் என்ற அளவில் இருக்கிறது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 15,906. இதில் கேரளாவில் மட்டும் 8,909 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,41,75,468.

இதுவரை குணமடைந்தோர்: 3,35,48,605.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 16,479.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 561. இதில் கேரளாவில் 65 பேர் உயிரிழப்பு.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,54,269.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,72,594. இது கடந்த 235 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைவு.

இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,02,10,43,258 (நேற்று மாலை 7 மணி நிலவரப்படி)

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 98.17% ஆக அதிகரித்துள்ளது.

பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதன் அளவீடு.

வாரந்திர பாசிடிவிட்டி ரேட் 1.23% ஆக உள்ளது. தினசரி பாசிடிவிட்டி ரேட் 1.19% ஆக உள்ளது. இதுவும் கடந்த 53 நாட்களாக 50%க்கும் கீழ் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT