தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த காஷ்மீர் போலீஸ் பர்வேஷ் அகமது தரின் குடும்பத்தினரை அமித் ஷா சந்தித்து ஆறுதல் கூறினார். 
இந்தியா

பிரதமர் மோடியின் கொள்கை புதிய காஷ்மீர்: அமித் ஷா திட்டவட்டம்

செய்திப்பிரிவு

பிரதமர் மோடியின் கொள்கையான புதிய காஷ்மீர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, ஜம்மு - காஷ்மீர் சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த காஷ்மீர் போலீஸ் பர்வேஷ் அகமது தரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பின்னர் நவ்காம் கிராமத்திலும் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
வீரமரணம் அடைந்த பர்வேஷ் அகமது அகமது தரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவருக்கு அஞ்சலி செலுத்தினேன்.

அவரின் வீரத்தை கண்டு தேசம் பெருமை கொள்கிறது. அவரது மனைவிக்கு அரசுப்பணி வழங்கப்படும். பிரதமர் மோடியின் கொள்கையான புதிய காஷ்மீர் என்ற கொள்கை நோக்கி போலீஸார் பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT