மருத்துவ படிப்பில் பொருளா தாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுக்கு ரூ.8 லட்சம் வருமான உச்ச வரம்பு நிர்ணயித் துள்ளதை மத்திய அரசு மறுபரி சீலனை செய்யுமா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவின ருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்தது. இதற்கான தகுதியாக ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சம் என்று நிர்ணயித்தது.
மேலும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஏற்கெனவே இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வருமான உச்சவரம்பாக ரூ.8 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது பற்றி உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை இவ்வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாதது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க் கைக்கு எந்த அடிப்படையில் ரூ.8 லட்சம் வருமான உச்ச வரம்பை மத்திய அரசு நிர்ண யித்தது என்று தெரிந்து கொள்ளவிரும்புகிறோம். இந்தவருமான உச்சவரம்பை மத்தியஅரசு மறுபரிசீலனை செய்யப்போகிறதா, இல்லையா என்று தெரிவிக்க வேண்டும். சாதாரணமாக இப்படி உச்ச வரம்பு நிர்ணயிக்க முடியாது. இவ்வாறு நிர்ணயம் செய்வதற்கு மக்கள் தொகை அடிப்படையிலான ஆய்வு அல்லதுபுள்ளிவிவரங்கள், தகவல்கள்கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட் டதா? ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படாவிட்டால் வருமான உச்சவரம்பு அளவுகோலுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க முடியுமா என்று மத்திய அரசு ஒருவாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி கள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.