பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக நேற்று பெல்ஜியம் சென்றார்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் 13-வது இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் மோடி பங்கேற்கிறார். இம்மாநாட்டில் இருதரப்புக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
முன்னதாக பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தற்கொலைப் படை தாக்கு தலை எதிர்கொண்ட பெல்ஜியம் மக்களின் மனஉறுதி பாராட் டுக்குரியது. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பெல்ஜியத் துக்கு இந்தியா தோள் கொடுக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளில் இந்தியாவுடன் அதிக அளவில் வர்த்தகம் மேற் கொள்ளும் நாடுகள் பட்டியலில் பெல்ஜியம் 2-வது இடத்தில் உள்ளது. எனது பயணத்தின் மூலம் இருநாட்டு உறவு மேலும் வலுப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.