இந்தியா

திருப்பதி தேவஸ்தான பட்ஜெட்டில் கணக்கில் வராத ரூ.43 கோடி: ஆய்வு செய்ய ஆந்திர நிதி அமைச்சர் உத்தரவு

என்.மகேஷ் குமார்

திருமலை-திருப்பதி தேவஸ் தானம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய் யப்படுறது. இதில் ஆண்டு வருமானம், செலவு கணக்குகள், வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை அடங்கும். ஆனால் இதில் ரூ.63 கோடிக்கு சரிவர கணக்கு காட்டப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று திருமலைக்கு வந்த ஆந்திர நிதி அமைச்சர் யனமல ராமகிருஷ்ணுடு இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் விசாரித்தார். அப்போது, ரூ.20 கோடிக்கு அவரிடம் உடனடி யாக கணக்கு காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து, இதுகுறித்து விரைவாக ஆய்வு செய்து மீத முள்ள ரூ.43 கோடிக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் முறையாக கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேவஸ் தான இணை நிர்வாக அதிகாரி நிவாச ராஜுவுக்கு நிதி அமைச்சர் உத்தரவிட்டார். பின்னர் அமைச்சருக்கு தேவஸ்தானம் சார்பில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT