கோப்புப்படம் 
இந்தியா

இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர்- நவம்பரில் 60 % கர்ப்பிணிகளுக்கு மட்டுமே 3 வேளை உணவு கிடைத்தது: யுனிசெப் ஆய்வில் தகவல்

செய்திப்பிரிவு


இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் 60 சதவீதம் கர்ப்பிணிகளுக்கு மட்டுமே 3 வேளை உணவு கிடைத்தது. கரோனா காலத்தில் கடுமையான உணவுப்பற்றாக்குறையும், வறுமையும் நிலவியது என்று யுனிசெப் இந்தியா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

யுனெசெப் இந்தியா சார்பில் "சமூக அடிப்படையிலான கண்காணிப்பு மூலம் பாதிக்கப்படக்கூடிய மக்களின் சமூக பொருளாதார சூழ்நிலையில் கரோனா தொற்றுநோயின் தாக்கத்தை மதிப்பிடுதல்" என்ற தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டது.அந்த ஆய்வு இந்திய மனித மேம்பாட்டு நிறுவனத்துடன்(ஐஹெச்டி) இணைந்து யுனிெசப் சார்பில் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் ஏறக்குறைய 6 ஆயிரம் குடும்பங்கள் பங்கேற்றன. கடந்த ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் வரை ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான்,தமிழகம், தெலங்கானா, உ.பி. ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 12 மாவட்டங்கள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. கரோனா காலத்தில் போதுமான அளவு உணவு கிடைப்பதில் உள்ள சவால்கள் கணக்கில் எடுக்கப்பட்டன.

இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

இந்த ஆய்வில் பங்கேற்ற குடும்பங்களில் 60 சதவீதம் கர்ப்பணிகள் மட்டும் அதாவது ஐந்தில் 3 பகுதி மட்டுமே 3 வேளை உணவு சாப்பிட்டதாகத் தெரிவித்தனர். தங்கள் வாழும் பகுதியில் உணவுப் பற்றாக்குறை, உணவு கிடைப்பதில் சிரமம், விலைவாசி உயர்வு ஆகியவற்றால் 3 வேளை சாப்பிடமுடியவில்லை எனத் தெரிவித்தனர். போதுமான அளவு உணவு கிடைக்காதது கர்ப்பிணிகளை மட்டுமல்லாமல், வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கும் சத்தான உணவு கிடைக்காமல் பாதித்துள்ளது.

குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ரா, ஜாலூன், லலித்பூர் ஆகிய மாவட்டங்களில் கர்ப்பணிகள் நிலைமை மோசமாக இருந்துள்ளது.

ஆய்வில்பங்கேற்றவர்களில் மூன்றில் ஒருபகுதியினர், அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், பால், பழங்கள், முட்டை ஆகியவை கடந்த ஆண்டு டிசம்பர் வரை பற்றாக்குறையாகத்தான் கிடைத்தன என்று தெரிவித்தனர். இதன் காரணமாக இதுபோன்ற புரோட்டீன் சத்துமிகுந்த உணவுகளை உட்கொள்வதைக் குறைத்ததால்,குழந்தைகள் வளர்ச்சி, மேம்பாட்டில் பெரிய பாதிப்பு ஏற்படுக்கூடும்.

இந்தஆய்வில் நகர்புறங்களில் வசித்தவர்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டனர், ஆனால் கிராமப்புறங்களில் வசி்த்தவர்களுக்கு ஓரளவுக்கு உணவுகள் கிைடத்துள்ளன.

இந்த சூழல் இந்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதத்துக்குப்பின்புதான் ஓரளவுக்கு முன்னேற்றம் அடைந்தது. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்வரை உணவுப்பற்றாக்குறை இருந்தது என்று நகர்புறங்களில்வசித்தவர்கள் 28 சதவீதம் பேர் தெரிவித்தனர்.

கரோனா தொற்று காரணமாக நகர்புறங்களில் இருந்து புலம்பெயர்ந்து கிராமங்களுக்கு வந்தவர்களில் குடும்பத் தலைவியாக பெண்கள் இருக்கும் வீடுகள் மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளன. குறிப்பாக வேலையின்மை, உணவுப் பற்றாக்குறை மோசமான அளவில் இருந்துள்ளன. சிறு குழந்தைகள் வீட்டில் வைத்திருப்போர் அந்த குழந்தைகளுக்கு சரிவிகித உணவு வழங்க முடியாமல் மிகுந்த சிரமத்தைச் சந்தித்துள்ளனர்.

வேலையின்மை அளவும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப்பின்புதான் படிப்படியாகக் குறையத் தொடங்கி, லாக்டவுனுக்கு முந்தையக் காலத்துக்கு வந்தது. ஆனாலும் கரோனாவுக்குப்பின்பு முறையான ஊதியத்தில் வேலை கிடைப்பது கடினமாகியது, தகுதியில்லாத வேலைபார்த்தல், ஊதியக் குறைப்பு போன்ற சி்க்கல்களைச் சந்தித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் கரோனா சிகிச்சையிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. நகரங்களைவிட கிராமப்புறங்களில் சிகிச்சை மேம்பட்டது என்று தெரிவித்தனர். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதும் கரோனா காலத்தில் கிராமங்களைவிட நகர்புறங்களில்தான் அதிகமான பாதிப்பைச்ச ந்தித்தது

ஆனால் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT