விளையாட்டில் அரசியலை திணிக்கக் கூடாது இந்தியா பாகிஸ்தான் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி நடக்க வேண்டும் என்று இந்திய பேட்மின்டன் ஜாம்பவானான பிரகாஷ் படுகோனே தெரிவித்துள்ளார்.
துபாயில் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கி இந்தியா பாகிஸ்தான் இடையே டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், இந்தப் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி இந்தியா இந்தப் போட்டியில் விளையாடக் கூடாது என வலியுறுத்தியுள்ளது. இதுபோல் பல்வேறு கட்சிகளும் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய பேட்மின்டன் ஜாம்பவானான பிரகாஷ் படுகோனே கூறுகையில், "என்னைப் பொருத்தவரை இந்தியா பாகிஸ்தான் இடையே டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற வேண்டும். விளையாட்டை அரசியலாக்கக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் சமீப நாட்களாக அப்பாவி பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள் கொல்லப்படுகின்றனர். பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் தான் இந்தச் செயலைத் தூண்டிவிடுகின்றன.
இந்நிலையில், இந்தியா பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று ஏஏபி போன்ற கட்சிகள் கூறுகின்றன.