அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்கட்டும் என பிரதமர் நரேந்திர மோடி தனது மிலாது நபி வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.
நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான இன்று இஸ்லாமியப் பெருமக்களால் மிலாது நபியாக கடைப்பிடிக்கப்படுகிறது.
மிலாது நபியை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மிலாது நபி வாழ்த்துகள். அமைதியும், வளமும் நம்மை எப்போதும் சூழ்ந்திருக்கட்டும். அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்கட்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு மிலாது நபி கொண்டாட்டத்திற்கான பிறை அக்.18 மாலை தெரியத் தொடங்கியது இன்று அக்.19 ஆம் தேதி மாலை வரை மிலாது நபி கொண்டாடப்படுகிறது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துச் செய்தியில், "இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு மிலாது நபி வாழ்த்துகள். முகமது நபியின் வாழ்க்கையை, கொள்கையைப் பின்பற்றுவோம். சமூகத்தில் அமைதியும், ஒற்றுமையும் இருப்பதை உறுதி செய்வோம்" என்று கூறியிருக்கிறார்.
உருது மொழியிலும் குடியரசுத் தலைவர் ட்வீட் செய்துள்ளார்.