குர்மீத் ராம் ரஹீம் 
இந்தியா

ஆசிரம மேலாளர் கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆயுள் தண்டனை

செய்திப்பிரிவு

ஹரியாணாவை தலைமையிடமாகக் கொண்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் ஏற்கெனவே ஆசிரமத்தில் 2 பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இதற்கிடையே, கடந்த 2002-ம் ஆண்டு தேரா சச்சா சவுதா அமைப்பில் ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார். பெண் சீடர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மேலாளர் ரஞ்சித் சிங், வெளியில் பரப்பியதாக குர்மீத் ராம் ரஹீம் சந்தேகித்துள்ளார். அதனால் ரஞ்சித்தை சிங்கை கொலை செய்துள்ளார் என்று சிபிஐ குற்றம் சாட்டியது.

இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குர்மீத் ராம் ரஹீம் மற்றும் அவரது கூட்டாளிகள் கிருஷ்னண் லால், ஜஸ்பிர் சிங், அவ்தார் சிங், சப்தில் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு 31 லட்சமும், சப்திலுக்கு 1.5 லட்சமும், ஜஸ்பிர் சிங் மற்றும் கிருஷ்ணனுக்கு தலா 1.25 லட்சமும், அவ்தார் சிங்கிற்கு 75 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையில் 50 சதவீதம் கொல்லப்பட்ட ரஞ்சித் சிங்கின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT