மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பராதிபாய் சவுத்ரி நேற்று இது குறித்து எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘‘பாகிஸ்தான் உளவு அமைப்புகள் இந்தியாவின் முன்னாள் ராணுவ வீரர்களை அவ்வப்போது தொடர்பு கொண்டு வேலை வாய்ப்பு, பணம் ஆகியவை அளிப்பதாக ஆசைக்காட்டி அவர்களை உளவு நடவடிக்கையில் ஈடுபடுத்த முயன்று வருகிறது. பாகிஸ்தான் வலையில் சிக்கி கடந்த 3 ஆண்டு களாக உளவு நடவடிக்கையில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் 8 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக் கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது’’ என்றார்.